/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரவுடி கொலை வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்
/
ரவுடி கொலை வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் சரண்
ADDED : ஜன 02, 2024 08:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி பிரபாகர், 34. இவர் மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன.
'ஏ பிளஸ்' ரவுடி பிரிவில், கண்காணிக்கப்பட்டு வந்தார். கடந்த டிச., 26ல், காஞ்சிபுரத்தில் இவரை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
டிச., 27ம் தேதி அதிகாலை, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே, கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் பிடிக்க சென்றனர்.
பல்லவர்மேட்டை சேர்ந்த ரகுவரன், 37, பாஷா என்கிற கருப்பு ஹசைன், 30, ஆகிய இருவரையும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தாக்க முயன்றனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், ரகுவரன் மற்றும் ஹசைன் ஆகிய இருவரும் இறந்தனர்.
பிரபாகர் கொலை வழக்கில், மேலும் நான்கு பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த நவீன்குமார், 25 மற்றும் கார்த்தி, 25, ஆகிய இருவரும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
இதையடுத்து, புழல் சிறையில் இருவரையும் போலீசார் அடைத்தனர்.
இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.