ADDED : நவ 27, 2024 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தோர் சின்னதுரை, 47, செந்தில்முருகன், 46, ஆகிய இருவரும், படப்பை அருகே வரதராஜபுரம், ஜெயலட்சுமி நகரில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.
நேற்று, காஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது, அதிகளவு காஸ் கசிந்துள்ளது. அதனால், அடுப்பை அணைத்தனர்.
காஸ் வெளியேறாமல் அந்த அறையிலே இருந்த நிலையில், மீண்டும் அடுப்பை பற்றவைத்தபோது, திடீரென தீப்பற்றியது.
இதில், பலத்த தீக்காயமடைந்த இருவரையும், அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.