/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது சரக்கு வாகனம் மோதி இரண்டு பேர் பலி
/
லாரி மீது சரக்கு வாகனம் மோதி இரண்டு பேர் பலி
ADDED : ஜன 05, 2026 05:48 AM
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, சாலையோரம் நின்றிருந்த டாரஸ் லாரி மீது, மற்றொரு சரக்கு லாரி மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் திலீப், 45; பெங்களூரைச் சேர்ந்தவர் ஸ்டாணி, 49; உ.பி.,யைச் சேர்ந்தவர் நீரஜ், 25; மூவரும், 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில், பெங்களூரில் இரும்பு பொருட்களை ஏற்றி, நேற்று காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம் அடுத்த, மாம்பாக்கம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த டாரஸ் லாரி மீது, சரக்கு லாரி மோதியது.
இதில், சரக்கு லாரி அப்பளம் போல் நொறுங்கியது. வாகனத்தை ஓட்டி வந்த திலீப், முன்னாள் அமர்ந்து வந்த ஸ்டாணி, இருவரும் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நீரஜ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காயம் பட்டவரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார், உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

