ADDED : மார் 17, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மதுரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் சுதாகர். தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், தன் மனைவியை சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி, காலை 8:00 மணியளவில், மருத்துவமனை முன்பாக தன் பேஷன்ப்ரோ இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பிற்பகல் 12:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, விஷ்ணுகாஞ்சி போலீசில் அவர் புகார் அளித்திருந்தார். போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
பின், உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த இளநகர் கிராமத்தில் வசிக்கும் மோகன், 33, என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

