/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை ஆக்கிரமித்துள்ள டூ-வீலர்கள் ஒரகடம் சிப்காட்டில் விபத்து அபாயம்
/
சாலையை ஆக்கிரமித்துள்ள டூ-வீலர்கள் ஒரகடம் சிப்காட்டில் விபத்து அபாயம்
சாலையை ஆக்கிரமித்துள்ள டூ-வீலர்கள் ஒரகடம் சிப்காட்டில் விபத்து அபாயம்
சாலையை ஆக்கிரமித்துள்ள டூ-வீலர்கள் ஒரகடம் சிப்காட்டில் விபத்து அபாயம்
ADDED : மே 17, 2025 01:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியான, வைப்பூர், எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
எறையூர் செல்லும் சிப்காட் சாலை வழியாக, வைப்பூர் உள்ளிட்ட கிராமத்தினர் ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். தவிர, தொழிற்சாலைக்கு செல்லும் ஏராளமான தொழிற்சாலை பேருந்து, கன்டெய்னர் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வரும் ஊழியர்கள், தங்களின் இருசக்கர வாகனங்களை சிப்காட் சாலையில் நிறுத்தி செல்கின்றனர். அதேபோல, தொழிற்சாலை பேருந்து, வேன், கன்டெய்னர் வாகனங்களை சிப்காட் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், சாலையின் அகலம் குறைந்து, அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எதிரெதிரே இரண்டு கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சிப்காட் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களை அகற்ற, ஒரகடம் சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.