/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது
/
போக்சோ சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது
ADDED : பிப் 07, 2025 10:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், அதே கிராமத்தை சேர்ந்த கலையரசன் மகன் விஷ்ணு 23, தன்னை காதலிக்குமாறு கடந்த இரு ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளார். இதை சிறுமி ஏற்காததால், கடந்த ஆண்டு நவ., 16ம் தேதி சிறுமி தன் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற விஷ்ணு, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக, சிறுமியின் தாய், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு வழக்கு
காஞ்சிபுரம் அடுத்த சீயட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில், அதே ஊரை சேர்ந்த ஹரிஹரன், 21, தவறாக நடந்து கொண்டதாக அவரது தந்தை பொன்னேரிக்கரை போலீசில் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து இரு போலீஸ் நிலையங்களிலும் போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீழம்பியை சேர்ந்த விஷ்ணு, சீயட்டியை சேர்ந்த ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.