/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத வளைவு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தடுப்பு இல்லாத வளைவு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 19, 2025 12:50 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஓங்கூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியினர் செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆபத்தான சாலை வளைவுகள் உள்ளன. இதில், நல்லூர் நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள சாலை வளைவு மிகவும் குறுகலாகவும், சாலையோர தடுப்புகள் இல்லாமலும் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோரத்தில் உள்ள கால்வாயில் நிலைதடுமாறி விழும் அபாயம் உள்ளது. மேலும், கடந்த மழையின்போது சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது.
ஆபத்தான சாலை வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, சாலை வளைவில் உள்ள பாலத்தின் மீது போதிய இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.