/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்
/
பராமரிப்பு இல்லாத குளம்: தொற்று பரவும் அபாயம்
ADDED : டிச 22, 2024 12:15 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் திம்ம ராஜம்பேட்டை ஊராட்சிக்குஉட்பட்டது சீயமங்கலம் கிராமம்.இங்குள்ள மேட்டுத்தெரு பகுதியில், விநாயகர் கோவில் அருகே பொதுக்குளம் உள்ளது.
கடந்த காலத்தில் இப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாகஇருந்து வந்தது. தற்போதுபராமரிப்பின்றி, பயன்பாடுஇல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. குளத்தில் பாசி படர்ந்து, பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
மேலும், இந்த குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் ஒரு சிலர், தங்களது வீட்டு கழிவுநீரை குளத்தில் விடுவதோடு, குப்பை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.
இதனால், குளத்து தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி மற்றும் தொற்று நோய் ஏற்படக்கூடும் என, அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
எனவே, சீயமங்கலம் பொதுக்குளத்தில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுத்து, குளத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.