தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பராமரிப்பு இல்லாமல் தூர்ந்த தாங்கல் கால்வாய்: கால்நடைகளுக்கான நீர் ஆதாரம் பாதிப்பு

 பராமரிப்பு இல்லாமல் தூர்ந்த தாங்கல் கால்வாய்: கால்நடைகளுக்கான நீர் ஆதாரம் பாதிப்பு

 பராமரிப்பு இல்லாமல் தூர்ந்த தாங்கல் கால்வாய்: கால்நடைகளுக்கான நீர் ஆதாரம் பாதிப்பு


ADDED : ஏப் 08, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்;ஊத்துக்காடில் மூன்று தாங்கல் நீர்நிலைகளுக்கு சென்றடையும் நீர்வரத்து கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இக்கிராமத்தில் எல்லையம்மன் கோவில் அருகே குளம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த குளம் முழுமையாக நிரம்பி வெளியேறும் அதன் உபரிநீர், விவசாய நிலங்கள் மற்றும் சாலையொட்டி உள்ள கால்வாய் வழியாக துலுக்கன் தாங்கல், ஆண்டிதாங்கல் மற்றும் ஓடந்தாங்கல் உள்ளிட்ட நீர்நிலைகளை சென்றடைகின்றன.

தாங்கல் பகுதிகளில் நிரம்பும் அத்தண்ணீரைக் கொண்டு சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்து விவசாயிகள் சாகுபடி பணிகள் மேற்கொள்கின்றனர்.

மேலும் இத்தாங்கலில் சேகரமாகும் தண்ணீர் அப்பகுதிக்கு நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும், கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கான முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சில மாதங்களாக இத்தாங்கல் பகுதிகளுக்கான நீர்வரத்து கால்வாய் முறையான பராமரிப்பின்மையால் தூர்ந்து காணப்படுகிறது.

மேலும், ஊத்துக்காடில் ரியல் எஸ்டேட் மூலம் வீட்டு மனை பிரிவு ஏற்படுத்தும் நபர்கள் சிலர் பாதை வசதி போன்றவைக்காக கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், மழைக்காலங்களில் தாங்கல் பகுதிகளில் நீர் சேகரமாக வழிவகை இல்லாமல் நீர்நிலைகள் பாதித்து வருகின்றன.

எனவே, ஊத்துக்காடு எல்லைக்கு உட்பட்ட தாங்கல் பகுதிகளுக்கு சென்றடையும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us