/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சிறுவாக்கம் வளைவு
/
தடுப்பு இல்லாத சிறுவாக்கம் வளைவு
ADDED : டிச 09, 2025 06:38 AM

காஞ்சிபுரம்: சிறுவாக்கம் - வரதாபுரம் சாலை வளைவில், ஏரி பாசன கால்வாயோரம் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, காரை - பரந்துார் கூட்டு சாலையில் இருந்து, சிறுவாக்கம், சாமந்திபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரதாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே, சிறுவாக்கம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் போக்கு கால்வாய் உள்ளது. இதுதவிர, மூன்று இடங்களில் சாலை வளைவுகள் உள்ளன. இந்த சாலையோர வளைவுகளில் தடுப்புகள் அமைக்கவில்லை.
குறிப்பாக, சிறுவாக்கம்- - பரந்துார் கூட்டு சாலைக்கு செல்லும் கிராமப்புற சாலை குறுகியதாக இருப்பதால், ஒரே நேரத்தில் எதிரெதிரே இரு வாகனங்கள் வந்துவிட்டால், சாலையோர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
மேலும், வாகன ஓட்டிகள் வளைவுகளில் திரும்பும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.
எனவே, சாலையோர வளைவில் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

