/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசாத வேகத்தடை ஏனாத்துாரினர் அவதி
/
வர்ணம் பூசாத வேகத்தடை ஏனாத்துாரினர் அவதி
ADDED : நவ 10, 2024 12:51 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சமத்துவபுரம் கிராமத்தில் இருந்து, கட்டவாக்கம் கிராமம் வழியாக, 2 கி.மீ., துாரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தன. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை ஏற்று, வாலாஜாபாத் ஒன்றிய நிர்வாகம், ஏனாத்துார் சமத்துவபுரம் - சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் சாலையை, சமீபத்தில் முதல்வர் சாலை விரிவாக்க திட்டத்தில், புதிய தார்சாலை போட்டுள்ளனர்.
இதில், ஆறு இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர். இந்த வேகத்தடைகளின் அருகே, சாலை குறுக்கே கோடு போட்டுள்ளனர். வேகத்தடைகள் மீது எச்சரிக்கை கோடு வரையவில்லை.
இதனால், ஏனாத்துார் சமத்துவபுரம் கிராமம் வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளன.
எனவே, புதிய தார் சாலையில் போடப்பட்ட வேகத்தடைகள் மீது, வெள்ளை நிற வர்ணம் அடித்து, ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.