/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்பு இல்லாத சாலை வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : பிப் 14, 2025 12:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து வதியூர், கீழ்வெண்பாக்கம், திருமால்பூர் கிராமங்களின் வழியாக, கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இச்சாலையின் குறுக்கே, கம்பன் கால்வாய் கடந்து செல்கிறது. இந்த கால்வாயில், வடகிழக்கு பருவமழை காலங்களில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் போது, தைப்பாக்கம் - வதியூர் இடையே, தாழ்வான சாலையோரத்தில் தடுப்பு இல்லாததால், வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபடும்.
இதனால், தைப்பாக்கம், சாணார்பெண்டை கிராமத்தில் இருந்து, வதியூர், ஒழுக்கோல்பட்டு, கீழ் வெண்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் மற்றும் திருப்புட்குழி, முட்டவாக்கம் வழியாக வதியூர் செல்வோரின் பயணம் தடைபடும்.
எனவே, தைப்பாக்கம் - வதியூர் இடையே செல்லும் தாழ்வான சாலையின் இருபுறமும், தற்காலிக தடுப்பு அமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் தரைப்பாலத்தின் மீது, உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும். மேலும், சாலையில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

