/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத வளைவு வாகன ஓட்டிகள் அவதி
/
தடுப்பு இல்லாத வளைவு வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 07, 2024 01:13 AM

ஸ்ரீபெரும்புதுார்வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் படப்பையில் இருந்து ஒரத்துார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக நீலமங்கலம், குத்தனுார், ஏரிவாக்கம், காவனுார், வடமேல்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், பெரும்பகுதிகளில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை.
இதனால், இரவில் கும்மிருட்டான சாலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும், இந்த சாலையில் வடமேல்பாக்கம் அருகே உள்ள வளைவில் தடுப்பு இல்லை. இதனால், தடுப்புஇல்லாத வளைவில் திரும்பும் வாகன ஓட்டி கள், எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.