/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலம் வடமேல்பாக்கத்தில் அபாயம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலம் வடமேல்பாக்கத்தில் அபாயம்
ADDED : ஜன 20, 2025 01:28 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் நட்டரசம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வடமேல்பாக்கம் கிராமத்தில், ஒரத்துார் வழியே படப்பை செல்லும் சாலை, காட்டங்கொளத்துார் செல்லும் சாலை, சிறுவஞ்சூர், நட்டரசம்பட்டு வழியே செரப்பனஞ்சேரி செல்லும் சாலைகள் சந்திக்கும் சந்திப்பு உள்ளது.
தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லும் இந்த சந்திப்பில், மழைநீர் செல்ல சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுபாலத்தின் இறுபுறங்களில் தடுப்பு இல்லை. இதனால், சாலை சந்திப்பு வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
அதேபோல், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் சந்திப்பில் போதிய வெளிச்சம் இல்லாததால், கார், பைக் உள்ளிட்டவை சாலையோரம் தடுப்பு இல்லாமல் உள்ள பாலத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது.
எனவே, பல்வேறு சாலைகளை இணைக்கும் இந்த சந்திப்பில் உள்ள பாலத்திற்கு தடுப்பு ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.