/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
/
கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2024 09:56 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.,2ல், சென்னையில் நடைபெற உள்ள பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாத தொகுப்பு ஊதியமாக 4,000ரூபாய் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் நிர்ணயித்து காலமுறை ஊதியத்தில் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வாயிலாக மாத ஊதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
துாய்மை காவலர்களுக்கு மாத ஊதியம், 10,௦௦௦ ரூபாய் வழங்குவதோடு, அதை ஊராட்சி வாயிலாக நேரடியாக வழங்க வேண்டும்.
துாய்மை பாரத திட்ட சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு மாத ஊதியம் 10,௦௦௦ ரூபாயை ஊராட்சி வாயிலாக வழங்க வேண்டும்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட சமூக தணிக்கை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய கிராம ஊராட்சி முன் களப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை 15,000 ரூபாய் இதுவரை வழங்கவில்லை. அத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.
இவ்வாறு தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அமரேசன் தெரிவித்துள்ளார்.