/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 03, 2025 01:26 AM

களக்காட்டூர்: களக்காட்டூரில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையம் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளதால், மேய்ச்சலுக்காக வரும் மாடுகள் அங்கன்வாடி மையத்தில் உலாவுகின்றன.
இதனால், அங்கன்வாடி மைய ஊழியர்கள் தினமும் காலையில் பணிக்கு வந்ததும், கால்நடைகளின் சாணத்தை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. மேலும், அங்கன்வாடி மையத்தில் இருந்து குழந்தைகள் வீதிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.