/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலத்தில் மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
/
பாலத்தில் மின் விளக்கு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 11:44 PM

உத்திரமேரூர், -திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் பாலாற்றின் மீது, 25 ஆண்டுகளுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த பாலத்தின் வழியே தினமும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் பலர் சென்று வருகின்றனர்.
இதுவரை பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அச்சத்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
தொடர்ந்து, இரவு நேரங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குவாரிகளில் இயக்கப்படும், லோடு லாரிகள் வேகமாக செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, திருமுக்கூடல் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.