/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோழனூர் குளத்தை பராமரிக்க வலியுறுத்தல்
/
சோழனூர் குளத்தை பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 01:02 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அத்தியூர் மேல்தூளி ஊராட்சியில், சோழனூர் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், கடம்பூரான் புரவடை செல்லும் சாலை அருகே பொது குளம் உள்ளது.
இந்த பொது குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. குளத்தின் கரையின் மேல் உள்ள மண்பாதையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குளத்தில் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே, சோழனூர் பொது குளத்தை தூர்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.