/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியப்பேட்டை குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
களியப்பேட்டை குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 06, 2025 12:37 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை ஊராட்சியில், ஜீவா நகர், கம்மாளங்குட்டை குடியிருப்பு, களியபேட்டை, ஆதி திராவிடர் குடியிருப்பு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், களியப்பேட்டை கிராமத்தில் இருந்து, கரும்பாக்கம் செல்லும் சாலையோரத்தில் பொது குளம் உள்ளது.
இந்த பொது குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
மேலும், குளத்தில் பாசி படர்ந்தும் உள்ளது. தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க இந்த குளத்திற்கு தினமும் வருகின்றன.
அப்போது, குளத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் கால்நடைகள் குளத்தில் இறங்கி, தண்ணீர் குடிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. எனவே, களியப்பேட்டை பொது குளத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.