/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விசூர் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
விசூர் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 01:33 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் கிராமத்தில், சமூக காடுகள் அருகே, பொது குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது.
இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு, 16 லட்சம் செலவில், இந்த குளம் சீரமைக்கப்பட்டது.
தற்போது, இந்த குளம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தின் கரையின் மீது செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. மேலும், குளத்தின் கரை சேதமடைந்து கற்கள் சரிந்து காணப்படுகின்றன.
தற்போது, கோடை வெயில் துவங்கி உள்ள நிலையில், மேய்ச்சலுக்கு ஒட்டி செல்லப்படும் கால்நடைகள், இந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வருகின்றன. அப்போது, குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருப்பதால், கால்நடைகள் குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, விசூர் பொது குளத்தை விரைந்து சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.