/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2025 12:39 AM

காஞ்சிபுரம்:மின்நகரில் பாதியில் விடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம்,கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர், அகத்தியர் தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது.
கால்வாய் கட்டுமானப்பணி முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக பாதியில் விடப்பட்டுள்ளது.
இதனால், கால்வாய் துார்ந்தும், மழைநீர் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்குவதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், மின்நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அகத்தியர் தெருவில் பாதியில் விடபட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் கட்டுமானபணியை விரைந்து முடிக்க காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நகர் பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர், அகத்தியர் தெருவில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கால்வாய் கட்டுமானப்பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.