/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 11:54 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 13வது வார்டு, பாரதி நகர் பிரதான சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. எனவே, இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இப்பகுதிக்கு சாலை அமைக்க ஐந்து மாதங்களுக்கு முன், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட பணியை துவக்காமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் பழுதாகின்றன.
ஜல்லி கற்களில் இருந்து பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் துாசு படிகிறது.
எனவே, பாரதி நகரில், கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.