/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஞ்சுபேட்டையில் குப்பை கொட்டுமிடத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 15, 2025 01:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், காலியாக உள்ள இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, அப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெரு வழியாக, கருப்படித்தட்டடை, ஏகாம்பர நாதர் கோவில், புதிய ரயில் நிலையம், வேளாண் அலுவலகம், போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த பஞ்சுபேட்டை பெரிய தெரு நுழைவாயில் பகுதியில், சாலையோரம் உள்ள காலிமனையில் சுற்றியுள்ள பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாததால், குப்பையில் உள்ள கெட்டுப்போன உணவு, மீன், இறைச்சி உள்ளிட்ட கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குவியலாக உள்ள குப்பையை அகற்றவும், அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நடைபயிற்சிக்கான நடைபாதையுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.