/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மானாம்பதி கூட்டு சாலையில் குடிநீர் கிணறு அமைக்க வலியுறுத்தல்
/
மானாம்பதி கூட்டு சாலையில் குடிநீர் கிணறு அமைக்க வலியுறுத்தல்
மானாம்பதி கூட்டு சாலையில் குடிநீர் கிணறு அமைக்க வலியுறுத்தல்
மானாம்பதி கூட்டு சாலையில் குடிநீர் கிணறு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 13, 2025 08:27 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய் ஆகியவற்றின் வாயிலாக குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், மானாம்பதியில் இருந்து 5 கி.மீ., தூரமுள்ள, பெருநகர் செய்யாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்தும் குழாய்கள் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க, மானாம்பதி கூட்டுசாலை பகுதியில் குடிநீர் நீர்த்தேக்க கிணறு அமைத்து, செய்யாற்றில் இருந்து குடிநீரை கொண்டு வந்து சேமித்து, அங்கிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்பும்போது, குழாய் உடைப்பை சரி செய்ய முடியும் என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே, மானாம்பதி கூட்டு சாலையில் நீர்த்தேக்கத் கிணறு அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.