/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
காஞ்சியில் கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சியில் கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சியில் கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2025 10:40 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில், மண் திட்டுகளாலும், வளர்ந்துள்ள செடிகளாலும், துார்ந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 25வது வார்டு திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகரில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், வளர்ந்துள்ள செடிகளாலும், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில், மாத கணக்கில் தேங்குவதால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.