/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திம்மராஜம்பேட்டை சாலையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
திம்மராஜம்பேட்டை சாலையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
திம்மராஜம்பேட்டை சாலையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
திம்மராஜம்பேட்டை சாலையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : மே 30, 2025 10:28 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், திம்மராஜம்பேட்டை உள்ளது.
இச்சாலை வழியாக இரவு, பகலாக தொடர்ந்து ஆயிர கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.
இப்பகுதி சாலையில் இரண்டு இடங்களில் அபாரயகரமான வளைவுகள் உள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் இருவழி சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது.
வாலாஜாபாத் அடுத்த வெண்குடி, ஒட்டிவாக்கம், திம்மராஜம்பேட்டை உள்ளிட்ட பகுதி சாலைகளில் இப்பணி முழுமை பெற்றுள்ளது.
இச்சாலை இருவழிச் சாலையாக இருந்தபோது, சாலையின் ஒரு புறத்தில் மின்விளக்கு வசதி இருந்தது.
சாலை பணியின் போது அக்கம்பங்கள் அகற்றப்பட்டு தற்போது மீண்டும் பயன்பாட்டில் உள்ளது.
சாலை விரிவாக்கம் செய்ததையடுத்து சாலையோரத்தின் மற்றொருபுறம் மின் வசதி இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருன்றனர்.
குறிப்பாக திம்மராஜம்பேட்டை உள்ளிட்ட அபாயகரமான சாலை வளைவுகளில் மின் விளக்கு வசதி இல்லாததால் விபத்து அபாயம் அதிகம் உள்ளன.
எனவே, விரிவாக்கம் செய்துள்ள காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், புதியதாக மின்கம்பங்கள் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.