/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குருவிமலை வாரசந்தை வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
/
குருவிமலை வாரசந்தை வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
குருவிமலை வாரசந்தை வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
குருவிமலை வாரசந்தை வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 06:01 AM

குருவிமலை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் வாரசந்தை நடைபெறும் வளாகத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, குருவிமலை கிராமத்தில், ஐந்து ஆண்டுளாக ஞாயிறுதோறும் வாரசந்தை நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு, 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழம், வீட்டு உபயோகம், பலசரக்கு மளிகை பொருட்கள், ஜவுளி, நடமாடும் டிபன் கடை உட்பட பல்வேறு கடைகள் அமைக்கப் படுகின்றன.
வாரசந்தைக்கு குருவிமலையை சுற்றியுள்ள கிராமத்தினர் மட்டுமின்றி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
வாரசந்தை நடை பெறும் வளாகத்தில், தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை.
காய்கறி கடைகளில் அமைக்கப்பட்டுள்ள பேட்டரி விளக்குகளில் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளதால் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காய்கறிகள், ஜவுளி, டிபன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் உள்ளிட்டவற்றின் தரத்தை பார்த்து வாங்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.
எனவே, குருவிமலையில் வாரசந்தை நடைபெறும் வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

