/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
/
ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2025 11:56 PM

வாலாஜாபாத், தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிப்பு பணி மேற்கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது தம்மனுார் கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்து நீர், பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பயன்பாடாக உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு களில் கோவில் விழா காலங்களின்போது இக்குளத்தில் தெப்போத்சவ ம் விழா நடப்பது வழக்கம்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக இந்த குளம் முறையான பராமரிப்பின்மையால் துார்ந்துள்ளது. குளத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோரை புற்கள் உள்ளிட்ட பல்வேறு செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
இதனால், இக் குளத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, தம்மனுார் ஏகாம்பரேஸ் வரர் கோவில் குளத்தை மழைக்காலத்திற்கு முன் துார்வாரி, கரை பகுதியில் கருங்கல் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.