/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலீஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
/
காலீஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
காலீஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
காலீஸ்வரர் கோவில் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 30, 2025 12:40 AM

சீட்டணஞ்சேரி:சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் கோவில் குளத்தை துார்வாரி பராமரிப்பு பணி மேற்கொள்ள பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான சிவகாமி சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பிலான கோவில் குளம் உள்ளது. கோவிலில் பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த குளத்து நீரை பயன்படுத்தும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
இந்நிலையில், சில ஆண்டுகளாக இந்த குளம் முறையான பராமரிப்பின்மையால் துார்ந்துள்ளது. இக்குளத்திற்கான நீர்வரத்து கால்வாய்களும் துார்ந்துள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் சேகரமாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவில் குளத்தை மழைக்காலத்திற்கு முன்னதாக துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'காலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை தொடர்ந்து கோவில் குளத்தை துார்வாரி சீர் செய்ய திட்டம் உள்ளது' என்றார்.