/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசாணிமங்கலம் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
அரசாணிமங்கலம் குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 07, 2025 01:09 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் கிராமத்தில், பொது குளம் உள்ளது. இந்த பொது குளம் அப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தின் நீரானது கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், கோரை புற்கள் வளர்ந்து உள்ளன. இதனால், குளத்திற்கு தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள், கோரை புற்களில் கால்கள் சிக்கி, மேலே ஏற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், கோடை வெயில் துவங்கி உள்ளதால், குளத்தில் தண்ணீரானது வேகமாக வறண்டு வருகிறது.
இதை பயன்படுத்தி, எதிர்வரும் மழைகாலத்தில் போதுமான அளவு தண்ணீரை சேமிக்க, குளத்தை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரைக்கும் குளத்தை சீரமைக்காமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது.
எனவே, அரசாணிமங்கலம் பொது குளத்தை சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.