/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியப்பேட்டை செங்குந்தர் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
களியப்பேட்டை செங்குந்தர் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
களியப்பேட்டை செங்குந்தர் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
களியப்பேட்டை செங்குந்தர் குளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 01, 2025 01:09 AM

களியப்பேட்டை:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியப்பேட்டை கிராமம். இக்கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் செங்குந்தர் குளம் உள்ளது.
இக்குளம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
மேலும் கால்நடைகளுக்கான நீராதாரமாகவும் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இக்குளம் தூர்வாராத நிலையில், மழைக்காலங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் சேகரமாகாத நிலை உள்ளது.
மேலும் குளக்கரையை சுற்றிலும் அப்பகுதியை சேர்ந்த சிலர், வைக்கோல் சேகரிப்பு, குப்பை கொட்டுதல் மற்றும் மரங்கள் வைத்து குளத்தங்கரையை ஆக்கிரமித்து வருகின்றனர்.
எனவே, களியப்பேட்டை பொதுக்குளத்தை துார்வாரி, குளத்தில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
* காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் ஊராட்சி, பிரதான சாலையோரம், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடி வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதாலும், கால்வாய் துார்ந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர்முழுமையாக வெளியேறும் வகையில், கால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.