/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மலையாங்குளம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
மலையாங்குளம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 27, 2025 01:29 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காட்டாங்குளம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.
இந்த தார்ச்சாலையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். 25 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட, இந்த இணைப்பு சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
தற்போது, சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளால் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இச்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க, அப்பகுதிவாசிகள் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சேதமடைந்த மலையாங்குளம் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.