/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை தொட்டியாக மாறிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
/
குப்பை தொட்டியாக மாறிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
குப்பை தொட்டியாக மாறிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
குப்பை தொட்டியாக மாறிய கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 12:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், இத்தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாய் குப்பை கழிவால் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைகாலத்தில், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதி குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, இக்கால்வாயை துார்வாரி சீரமைக்கவும், கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க கான்கிரீட் தளம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.