/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொள்ளாழி குடியிருப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
/
தொள்ளாழி குடியிருப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
தொள்ளாழி குடியிருப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
தொள்ளாழி குடியிருப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஏப் 22, 2025 12:27 AM

வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி கிராமத்தில் இருந்து, ஆம்பாக்கம் வழியாக, வாரணவாசி செல்லும் சாலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இச்சாலை வழியை பயன்படுத்தி, உள்ளாவூர், வரதாபுரம், தொள்ளாழி, தோண்டாங்குளம், மதுராப்பாக்கம், ஆம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், வாரணவாசி அடுத்த, பல பகுதிகளில் இயங்கும், தனியார் தொழிற்சாலைகளுக்கு இச்சாலை வழியாக வேன் மற்றும் ஏராளமான கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
தொள்ளாழியில் சாலையின் இருபுறமும் உள்ள குடியிருப்புகளில் இருப்போர் அப்பகுதி சாலையை கடக்க வேண்டி உள்ளது. அவ்வாறு சாலையை கடக்கும் போது, வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக அப்பகுதி விநாயகர் கோவில் அருகாமையிலான சாலை பகுதி விபத்து பகுதியாக உள்ளது.
எனவே, அச்சாலை பகுதியில் வேகத்தடை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொள்ளாழி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.