/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாக்குபேட்டையில் அரிசி ஆலை கழிவுகளால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 21, 2025 01:28 AM

காஞ்சிபுரம்,:பாக்குபேட்டையில், அரிசி ஆலை கழிவுகளாலும், செடி, கொடிகளாலும் துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் -- முசரவாக்கம் சாலை, புத்தேரி ஊராட்சி, பாக்குபேட்டை பிரதான சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இது கான்கிரீட் கால்வாயாக அமைக்காமல், மண் கால்வாயாக இருப்பதால், இதில், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதாலும், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாலும் கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் பாக்குபேட்டை வழியாக செல்லும் மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.