/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான வடிகால்வாய் தளம் சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான வடிகால்வாய் தளம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2025 01:19 AM

காஞ்சிபுரம்:சிறுணை கிராமம் சாலையோரம், பாதசாரிகள் நடைபாதையாக பயன்படுத்தும், மழைநீர் வடிகால்வாய் 'கான்கிரீட்' தளம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த, சிறுணை கிராமம் அருகில், கான்கிரீட் தளத்துடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக செல்லும்கனரக வாகன போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால், கால்வாய் மீது போடப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தை பாதசாரிகள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுணை கிராமம் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் கான்கிரீட் தளம் சேதமடைந்து, கால்வாய் திறந்து கிடப்பதால், இரவு நேரத்தில் கால்வாய் தளத்தில் நடந்து வரும் பாதசாரிகள், பள்ளத்தில் நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த மழைநீர் கால்வாய் கான்கிரீட் தளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.