/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான மின் கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 24, 2025 11:08 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி மின் வாரிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், படுநெல்லி, கோவிந்தவாடி, மூலபட்டு, கொட்டவாக்கம், சாமந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
பள்ளூர் துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படும் போது, பரந்துார் துணை மின் நிலையத்தில் இருந்து, மின் சப்ளை மாற்றம் செய்து கொடுக்க ஆங்காங்கே இரட்டை பாதை மின் கம்பம் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக தடையில்லாத மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
சமீபத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின் சப்ளை மாற்றம் செய்து கொடுக்கும் மின் கம்பங்கள் முறிவு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனால், பள்ளூர் துணை மின் நிலையம் மற்றும் பரந்துார் துணை மின் நிலைய மின் சப்ளை மாற்றம் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையால், கொட்டவாக்கம் ஏரிக்கரை ஓரத்தில் போடப்பட்ட மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டதில், கிராமத்திற்கு மின் சப்ளை சரியாக வினியோகம் செய்ய முடியவில்லை.
எனவே தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய சேதமான மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.