/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
/
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 11:50 PM

புத்தேரி: புத்தேரி ஊராட்சி, கோகுல் நகரில் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் வகையில், துார்ந்த நிலையில் உள்ள வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, கோகுல் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் சில நாட்களாக பெய்யும் மழையால் இங்குள்ள வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
மழைநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பாலும், துார்ந்த நிலையில் உள்ளதாலும், வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகள் நோய் தாக்கி இறக்கும் நிலை உள்ளது.
மழைநீரில் உள்ள பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், மழைநீரில் ' ஏடிஸ்' கொசு உற்பத்தியானால், புத்தேரியில் டெங்கு பரவும் நிலை உள்ளது.
என வே, கோகுல் நகரில் தேங்கியுள்ள மழைநீர் முழுதும் வெளியேறும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

