/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முட்செடிகளால் சூழ்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
முட்செடிகளால் சூழ்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
முட்செடிகளால் சூழ்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
முட்செடிகளால் சூழ்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 01:06 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் முட்செடிகளால் சூழ்ந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, மக்கள் யாராவது இறந்தால் அவரிகளின் உடலை அங்குள்ள சுடுகாடுகளில் புதைத்தும், எரித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டை 1 மற்றும் 2வது வார்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த சுடுகாடு முறையாக பராமரிப்பு இல்லாமல், முட்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், இங்கு இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் வரும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், சுடுகாட்டில் முட்செடிகள் மற்றும் கோரை புற்கள் வளர்ந்து உள்ளதால், விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் இங்கு வந்து செல்கின்றனர்.
எனவே, சுடுகாட்டை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.