உத்திரமேரூர் தொகுதி ஒதுக்கீடு :பா.ம.க., கொண்டாட்டம்
உத்திரமேரூர் தொகுதி ஒதுக்கீடு :பா.ம.க., கொண்டாட்டம்
ADDED : மார் 26, 2026 11:18 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடி வருகின்றனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உத்திரமேரூர் தொகுதியை பா.ம.க.,விற்கு ஒதுக்கி அ.தி.மு.க., பொது செயலர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, கட்சி துவங்கி 37 ஆண்டுகளில், 7 சட்டசபை தேர்தலை இதுவரை தாங்கள் சந்தித்து உள்ளதாகவும் அதில் உத்திரமேரூர் தொகுதியில் பெரும்பான்மை கொண்ட ஒரு கூட்டணி கட்சியில் முதன்முறையாக தங்களுக்கு சீட்டு வழங்கி உள்ளதாக பா.ம.க.,வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், அக்கட்சி நிர்வாகிகள் உத்திரமேரூரில் நேற்று பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பா.ம.க., உத்திரமேரூர் நகர செயலர் அரவிந்தன் மற்றும் அ.தி.மு.க., உத்திரமேரூர் நகர செயலர் ஜெயம்விஷ்ணு ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
தொடர்ந்து உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆ.,ர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது கூட்டணி கட்சிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தல் பணியாற்றி தொகுதியை வென்றெடுப்போம் என பா.ம.க.,வினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
