/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவில் தேரோட்டம்
/
உத்திரமேரூர் சுந்தர வரதர் கோவில் தேரோட்டம்
ADDED : மே 11, 2025 12:44 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடப்பாண்டு சித்திரை பிரம்மோத்சவ விழா, கடந்த 4ல் கொடியேற்றதுடன் துவங்கியது.
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிம்ம வாகனம், சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு வீதியுலா நடந்து வருகிறது.
இதையடுத்து, கடந்த 6ல் கருட சேவை உத்சவம் சிறப்பாக நடந்தது. இதைத் தொடர்ந்து, சித்திரை பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது.
முன்னதாக, பெருமாளுக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுந்தர வரதராஜ பெருமாள் ஆனந்தவல்லி நாயகி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 6:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து ரத வீதிகளில் இழுத்து வந்தனர். பின், தேரானது நிலையை வந்தடைந்தவுடன் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்திரை தேரோட்ட விழாவில் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.