/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர்- --- புக்கத்துறை நான்குவழிச் சாலை திறப்பு
/
உத்திரமேரூர்- --- புக்கத்துறை நான்குவழிச் சாலை திறப்பு
உத்திரமேரூர்- --- புக்கத்துறை நான்குவழிச் சாலை திறப்பு
உத்திரமேரூர்- --- புக்கத்துறை நான்குவழிச் சாலை திறப்பு
ADDED : மார் 08, 2024 11:21 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. குறுகியதான இச்சாலையில், அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
அதேபோல, உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசி மாநில நெடுஞ்சாலையுடன் இணையும், மானாம்பதி வரையிலான சாலையிலும் தினசரி நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், இச்சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உத்திரமேரூர்- - செங்கல்பட்டு இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான முதற்கட்ட பணியாக புக்கத்துறை முதல், நடராஜபுரம் வரையில், 3.6 கி.மீ., துாரம் மற்றும் உத்திரமேரூர்- மீனாட்சி கல்லுாரி வரையில், 3.6 கி.மீ., துாரம் என மொத்தம், 7.2 கி.மீ., துார சாலையை, 54.3 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, தலைமை செயலகத்தில் இருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் பகுதியில் நடந்த இதற்கான நேரலை நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உத்திரமேரூர் உதவி கோட்ட பொறியாளர் அனந்த கல்யாணராமன், உத்திரமேரூர் உதவி பொறியாளர் சுஜிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.