/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
உத்திரமேரூர் பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
உத்திரமேரூர் பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
உத்திரமேரூர் பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 30, 2024 04:30 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று அக்கல்லுாரியில் நடந்தது.
கடந்த 1996- - 99ம் ஆண்டில், அக்கல்லுாரியில் பயின்ற மாணவர்கள் பல பகுதிகளில் இருந்து வந்திருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25 ஆண்டுகளுக்குப் பின், பழைய நண்பர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர்.
தாங்கள் படித்த காலத்தில் இருந்து, தற்போது வரை அக்கல்லுாரியில் தொடர்ந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பத்மநாதன், ராஜேந்திரன் ஆகியோரை கவுரவித்தனர்.
பயின்ற காலத்தில் கல்லுாரியில் நடந்த சுவாரசியங்கள் குறித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மாணவர்கள் பேசினர்.
நிகழ்ச்சி நிறைவாக, அக்கல்லுாரி வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.