/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் துவக்கம்
/
காஞ்சியில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம் துவக்கம்
ADDED : பிப் 01, 2025 08:51 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோழி கழிச்சல் நோயை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழி கழிச்சல் நோய்க்கான இரு வார சிறப்பு தடுப்பூசி முகாம்கள், கால்நடை பராமரிப்பு துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோழி கழிச்சல் அல்லது வெள்ளை கழிச்சல் எனப்படும் இந்த நோய், வீட்டுப் பறவைகளை தாக்கும் மிகவும் கொடுமையான நச்சுயிரி நோயாக உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட பருவமடைந்த கோழிகளால் மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, கண்சவ்வு அழற்சி, பக்கவாதம் மற்றும் ஓரிரு நாட்களில் இறப்பும் ஏற்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோழி கழிச்சல் நோயை தடுக்க, அனைத்து கிராமங்களிலும் நேற்று முதல் 14ம் தேதி வரை, 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
நடப்பாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,47,200 கோழிகளுக்கு கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.