/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா
வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா
வெங்கடேச பெருமாள் கோவிலில் வரும் 30ல் வைகுண்ட ஏகாதசி விழா
ADDED : டிச 28, 2025 05:32 AM
காஞ்சிபுரம்: அய்யன்பேட்டை வெங்கடேசப்பெருமாள் கோவிலில், நாளை மறுதினம், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தில், வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்கவாசல் திறப்பு மற்றும் கருட சேவை உற்சவம் நடைபெறும்.
நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 30ம் தேதி, காலை 4:00 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மற்றும் 4:30 மணி அளவில், கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து, வெங்கடேசப் பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு அனுமந்த சேவை நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.