/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராமானுஜர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி
/
ராமானுஜர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி
ADDED : ஜன 09, 2025 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல்பத்து உற்சவம் டிச., 31ல் துவங்கியது.
அதன்படி, வைகுண்ட ஏகாதசி நாளான இன்று, அதிகாலை 3:00 மணிக்கு விஸ்வரூபம் நடைபெறும். காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, மதியம் 3:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணிக்கு திருவாராதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்கு ராபத்து உற்சவம் நடைபெறும்.