/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விளையாட்டு உபகரண பொருட்கள் இல்லாத வல்லப்பாக்கம் சிறுவர் பூங்கா
/
விளையாட்டு உபகரண பொருட்கள் இல்லாத வல்லப்பாக்கம் சிறுவர் பூங்கா
விளையாட்டு உபகரண பொருட்கள் இல்லாத வல்லப்பாக்கம் சிறுவர் பூங்கா
விளையாட்டு உபகரண பொருட்கள் இல்லாத வல்லப்பாக்கம் சிறுவர் பூங்கா
ADDED : பிப் 08, 2025 12:22 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டு வல்லப்பாக்கம் பகுதிஉள்ளது. இப்பகுதியில், பேரூராட்சி பொது நிதியின் கீழ் சிறுவர் விளையாட்டு பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்பூங்காவில், சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு ஊஞ்சல் உள்ளிட்ட ஒன்றிரண்டு உபரகணப் பொருட்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் போதுமான உபரகணப் பொருட்கள் இல்லாததால், இப்பகுதி சிறுவர்கள் பூங்காவிற்கு வர ஆர்வம் காட்டுவதில்லை என, கூறப்படுகிறது.
எனவே, வல்லப்பாக்கம் சிறுவர் பூங்காவில், சறுக்கல், இருக்கை வசதி மற்றும் வாத்து, மீன் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் மீது அமர்ந்து ராட்டிணம் போல் சுற்றவும், எதிர், எதிரே அமர்ந்து ஊஞ்சல் அடுவதுப் போன்ற உபகரணங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தர வேண்டும்.
பூங்காவை அழகுப் படுத்தும் வகையில் பூச்செடிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வல்லப்பாக்கம் சிறுவர் பூங்காவில், குழந்தைகள் விளையாடும் வகையிலான உபகரணப் பொருட்களை விரைந்து அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.