/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடியிருப்பில் வெள்ள நீர் சூழ்ந்து வரதராஜபுரம் தத்தளிக்கிறது
/
குடியிருப்பில் வெள்ள நீர் சூழ்ந்து வரதராஜபுரம் தத்தளிக்கிறது
குடியிருப்பில் வெள்ள நீர் சூழ்ந்து வரதராஜபுரம் தத்தளிக்கிறது
குடியிருப்பில் வெள்ள நீர் சூழ்ந்து வரதராஜபுரம் தத்தளிக்கிறது
ADDED : டிச 02, 2024 01:30 AM

குன்றத்துார்:'பெஞ்சல்' புயல் காரணமாக, கொட்டி தீர்த்த கன மழையால், அடையாறு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குன்றத்துார் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரத்வாஜ் நகர், மகாலட்சி நகர், பி.டி.சி., நகர், ராயப்பா நகர், குமரன் நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், மார்வல் கவுண்டி, கார்டன் சிட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்போர், வீட்டு உபயோக பொருட்களை தரை தளத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது தளத்திற்கு ஏற்றி வருகின்றனர்.
மார்வல் கவுண்டி, முதல் குறுக்கு தெருவில் மின்கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்தது. அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கினர்.
வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.