/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதர் கோவில் வஸ்திரம் ரூ.12 லட்சத்திற்கு ஏலம்
/
வரதர் கோவில் வஸ்திரம் ரூ.12 லட்சத்திற்கு ஏலம்
ADDED : டிச 24, 2024 12:30 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோவிலில் உள்ள பெருமாள் மற்றும்தாயாருக்கு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் வாயிலாக கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற வஸ்திரங்களின் ஏலம், கோவில் வளாகத்தில் உள்ள வசந்தமண்டபத்தில், கடந்த21, 22 ஆகிய இருநாட்களில், காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடந்தது.
இதில், பக்தர்கள் வாயிலாக 12 லட்சத்திற்கு வஸ்திரங்கள் ஏலம் எடுக்கப்பட்டது என, கோவில் உதவி ஆணையர் மற்றும் நிர்வாக அறங்காவலர்சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.