/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொசு வலை போர்த்தியபடி வி.சி., கவுன்சிலர் தர்ணா முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு
/
கொசு வலை போர்த்தியபடி வி.சி., கவுன்சிலர் தர்ணா முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு
கொசு வலை போர்த்தியபடி வி.சி., கவுன்சிலர் தர்ணா முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு
கொசு வலை போர்த்தியபடி வி.சி., கவுன்சிலர் தர்ணா முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஜன 14, 2025 12:32 AM

ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாவனி, ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, கூட்டத்திற்கு பங்கேற்க வந்த, இரண்டாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன், கொசு வலையை போர்த்தியபடி வந்தார்.
பின், ஒன்றிய நிதியில் பல்வேறு முறைகேடு நடைபெறுவாகக் கூறி, அலுவலக நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் பேசியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், இரண்டாவது வார்டில், நெமிலி, கிளாய், செங்காடு உள்ளிட்ட மூன்று ஊராட்சியில், 8 கிராமங்கள் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில், தங்களின் ஊராட்சிகளில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
கடந்த இரண்டு மாதங்களில், டெங்கு தடுப்பு பணிக்காக, ஒன்றிய பொது நிதியில் இருந்து, 12,11,322 ரூயாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், நெமிலி, கிளாய், செங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில், எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நுாறு நாள் வேலையில், பல முறைக்கேடுகள் நடக்கின்றன. இது போன்று, ஒன்றிய நிதியில், பல லட்சம் ரூபாய் கையாடல் நடைபெறுகிறது. எனவே, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

